மாணவிக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்பாட்டம்

(என்டன் )


 மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியருக்கு தண்டனை வழங்கக்கோரி பொதுமக்களால்  மட்டக்களப்பில் இன்று ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் மாணவி ஒருவருவரை  கடந்த 26.01.2016  ஆம் திகதி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார் என்ற  சந்தேகத்தின் பேரில் அந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் .

கைதுசெய்யப்பட்ட  ஆசிரியர்  27.01.2016 ஆம் திகதி   மட்டக்களப்பு நிதிவான் நீதிமன்ற  நீதிபதி எம்.கணேசராசா முன்னிலையில் ஆஜர் படுத்தியதை தொடர்ந்து நிதிவான் நீதிமன்ற  நீதிபதி எம்.கணேசராசா  08.02.2016 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார் .

இதனை தொடர்ந்து சந்தேக நபரான ஆசிரியர் இன்று 08.02.2016 ஆம் திகதி மட்டக்களப்பு நிதிவான் நீதிமன்ற  நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளார் .  .


இன்று நிதிவான் நீதிமன்ற  நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்துகின்ற ஆசிரியருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் ,பாடசாலை மாணவிக்கு நீதிகிடைக்க வேண்டும் எனவும் கோரி  கருவப்பங்கேணி கிராம பொதுமக்கள் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா  முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 




இந்த ஆர்பாட்டத்தின் போது கருவப்பங்கேணி கிராம பொதுமக்களால்   “இனியும் எந்த ஒரு மாணவிக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது” , “சேவையில் இருந்து நிறுத்து” ,”பெண்களுக்கும் ,சிறுமிகளுக்கும்  எதிரான வன்முறையை நிறுத்து” ,”பிணை வேண்டாம் தீர்வு  வேண்டும்” ,”ஆசிரியர் என்பவர் கற்பிப்பவர் கற்பழிப்பவர் அல்ல” , “எந்த ஒரு சட்டத் தரணியும் இவர் சார்பாக வாதாட வேண்டாம்” ,”பள்ளிக்கூட வகுப்பறைகள் பள்ளியரைகளாக மாற்ற வேண்டும்” ,”குருமார்களே காமுகர்களாக மாறவேண்டாம்” , “கல்விக்கூடத்தை கலவிகூடமாக மாற்றியவனை சிறையில் அடை”  போன்ற வாசங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது .