கல்லடி ஹரி சிறுவர் இல்ல மாணவர்களின் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு

 (என்டன் )

மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர்  இல்ல மாணவர்களின்  சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு  கல்லடி ஹரி சிறுவர்  இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது .


கல்லடி  ஹரி சிறுவர்    இல்ல மாணவர்களில் கல்வி பொது தராதர  உயர்தரத்தில்  B  பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழக பொறியியல் பீடத்துக்கு தெரிவான இல்ல மாணவன் .என் நிலோஜன், கல்வி பொது தர சாதாரண தரத்தில் 8A.1C, பெற்று சாதனை படைத்த  மாணவன் ஜி . மங்களன்   மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் 175 புள்ளிகளை பெற்று சாதனை படைத்த  மாணவன் எஸ் ,மதுஷன் ஆகியோருக்கு  விருது வழங்கி கௌரவிக்கும்  நிகழ்வு ஹரி சிறுவர்    இல்ல தலைவர் எஸ் .சந்திரகுமார் தலைமையில் ஹரி சிறுவர்  இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா ,வைத்தியர் பாலசுப்பிரமணியம் ,மாஸ்டர் சிவலிங்கம் , சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் , சமூகசேவை உத்தியோகத்தர் ,பல்கலைக்கழக உபவேந்தர்  திருமதி ,ஜெசங்கர் மற்றும் இல்ல ஆசிரியர்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .