மனித நேயப் பணிக்காக “வி” விருது பெற்ற எமது மண்ணின் மைந்தன் இயேசு சபைத் துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார்

(எஸ்.மைக்கல் )

“ஏற்ற பணி தொடர்க மண்ணுலகம் உம்மை நாளை மகான் என்று சொல்லும்” மற்றார்க்கு தொண்டாற்றி அவர் சிரிப்பினில் மகிழ்வு கொண்டோர் மீண்டும் மீண்டும் ஏழையின் புன்னகையே தம் வாழ்வின் இலட்சியமாய் கொள்வர்.

பின்னாளில் இக்கொடை உள்ளத்திற்கு பல்லோர் இடத்தில் வாழ்த்துக்களும் இறைவனிடத்தில் திடமான அன்பு அள்ளி இறைக்கப்படும். இதன் வழியே இன்று இயேசுசபைகத் துறவியும், பல தொண்டு நிலையங்களின் தாபகரும், கிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஆன்மீக இயக்குனரும், வண்ணத்துப்புச்சி சமாதானப்புங்காவின் செயல்நிறைவேற்று இயக்குனருமான அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாருக்கு “வி” விருது உரித்தாகியிருக்கின்றது.

சமூக சேவைகள் அமைச்சு UN, UNDP  இணைந்து தன்னார்வத் தொண்டாருக்கான 2015ம் ஆண்டுக்கான விருதினை அருட்தந்தை அவர்களுக்கும் வழங்கியிருக்கின்றது.

தன்னலம் பாராது பிறர் நலம் பேணி நிர்க்கதியான இளம் பிஞ்சுகளின் வாவிடமாகவும், உள்ளம் சிதைந்தோர்க்கு  ஒத்தடமிடும் மருந்தாகவும், கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஆன்மீக ஊற்றாகவும், அன்புத் தேன் தேடும் பல்லின வண்ணத்துப்பூச்சி சிறார்களுக்கு ஆறுதலூட்டும் பூங்காவாகவும் தொழில்  வளம் தேடும் இளைஞர்களுக்கும் வலுவூட்டும் உரமாகவும், கல்வித்தாகம் கொண்டோர்க்கு தாகம் தீரக்கும் நற்கடலாகவும் தன் வாழ்வினை அர்ப்பணித்து நாளைய  சமுதாயத்தினது  வழிகாட்டியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அருட்தந்தையவர்களுக்கு இவ்விருதானது கிடைக்கப்பெற்றமை தன்னார்வத் தொண்டின் மகத்துவத்தைப் புடம் போட்டுக்காட்டியிருக்கின்றது.

அருட்தந்தையவர்கள் தனது இளம்பராயம் முதல் இன்று வரையிலும் ஆற்றிக்கொண்டிருக்கும் தன்னலமற்ற தொண்டு உலகம் பூராகவும் வியாபித்திருக்கின்றது. பல நிபுணர்கள் கல்விமான்கள் நல்ல இதயம் கொண்டோர் என உலகம் பூராகவும் இவர் ஆசிக்கரங்கள் பட்டு சிறப்படைந்தோர் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது அருட்தந்தையவர்களின் அறுவடை, சின்னஞ்சிறார்களின் சிரிப்பொலி ஒரு அறுவடை, எழைகளின் திருப்தி ஒரு அறுவடை, உடைந்த உள்ளங்களின் ஒட்டல் ஒரு அறுவடை,  இளைஞர்களின் நம்பிக்கை ஒரு அறுவடை, வஞ்சிக்கப்பட்ட சிறுக்களின் வாழ்விடம் ஒரு அறுவடை, அன்பான இறைவனின் ஆசீர்வாதமும் இவர்க்கோர் அறுவடை அன்பான இறைவனின் ஆசிர்வாதமும் இவர்க்கோர் அறுவடை என்பதாலே.
ஆயிரக்கணக்கான கரங்களின் கைத்தட்டல்களுடன் “வி” விருதினை இவரது அன்புக்கரங்கள் தாங்கியது. நல் இதயங்களின் வாழ்த்துக்கள் என்றும் எம் அருட்தந்தைக்கு உரித்தாகட்டும்.