மகாஜன மகளிர் கல்லூரின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள்

(என்டன்)

மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள்  மட்டக்களப்பு  இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரி  வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இன்று மாலை 02.30 மணியளவில் மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் கல்லூரி  அதிபர் திருமதி  என் . துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

 இவ் விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன், முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா . ஸ்ரீநேசன் ,கௌரவ விருந்தினர்களாக உதவிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி வி .லவக்குமார், மன்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ .சுகுமார், பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் என் .நிலாகரன் ஆகியோருடன் மாணவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுகள் விளையாட்டு  ஆரம்பமானது,

இவ் விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, மாணவர்களின் தேக பயிற்சி, வினோத உடை போட்டி, மற்றும் பழைய மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,


இப் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.