மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கான குடி நீர் நிலையம் திறந்து வைக்கப்பட்டது

(என்டன்)

முஸ்லிம் எய்ட்   நிறுவனம் நாடாளாவியல்  ரீதியில்  பல சமூக அபிவிருத்தி  தொடர்பான  வேலைத்திட்டங்களை  மேற்கொண்டு  வருகின்றது .



இதன் அடிப்படையில் முஸ்லிம் எய்ட்  நிறுவனத்தினால்  மேற்கொள்ளப்படும்  சமூக வேலைத்திட்டத்தின்  கீழ்   மட்டக்களப்பு மயிலம்பாவெளி  ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய  மாணவர்கள்  எதிர் நோக்கிய சுகாதார முறையிலான குடி நீர்  மற்றும் மலசல கூட பிரச்சினைக்கு  தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் முஸ்லிம் எய்ட்   நிறுவன அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட மாணவர்களுக்கான குடி  நீர் நிலையம் மற்றும் மலசல கூடம்   இன்று  திறந்து  வைக்கப்பட்டது .

இதனுடன் இணைந்ததாக பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில்  ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய  மாணவ தலைவர்களுக்கு சின்னங்களும் மாணவ  தலைவர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது .

இந்நிகழ்வுகள் பாடசாலை அதிபர்  கே .ஸ்ரீதரன் தலைமையில்  இன்று பாடசாலையில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில்  ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர்  யு .உதயஸ்ரீதர், மட்டக்களப்பு   வலயக் கல்வி   பணிப்பாளர்   கே .பாஸ்கரன் ,   ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் . பாலசுப்பிரமணியம் ,முஸ்லிம் எய்ட்  நிறுவனத்தின் நாட்டுக்கான பணிப்பாளர் பயிசல்கான் , மாவட்ட இணைப்பாளர் எம் .எஸ் .சிராஸ் , நிறுவன சிரேஷ்ட திட்ட முகாமையாளர் எம்.எம். முனீர் , பாடுமீன்  லயன்ஸ் கழக தலைவர் சடார்ச்சராஜா மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .





















.