கன்னங்குடா மகா வித்தியாலயத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்

(என்டன் )

கன்னங்குடா மகா வித்தியாலயத்தின்   2016 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலயத்தின்   2016 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பிற்பகல்  02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் டி . புலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.

 விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக  மண்முனை மேற்கு பிரதேச செயலாளர்  எஸ் .சுதாகர் ,வவுணதீவு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பி. டி . நளீர் , வவுணதீவு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  த . நிர்மலராஜ் , மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்  . டி . சோமசுந்தரம் , உதவிக்கல்விப் பணிப்பாளர் (உடல்கல்வி )  எஸ் . சந்திரகுமார் மற்றும் இந்நிகழ்வில்  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.

விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .

விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, மாணவர்களின் உடற்பயிற்சி பயிற்சி, வினோத உடை போட்டி, மற்றும் பழைய மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,

பாடசாலையின் 2016ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.