கல்விக்கு உயிர் கொடுப்பவர்கள் மருணிப்பதில்லை - உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.வரதராஜன்

(இ.சுதாகரன்)

இன்றைய கால கட்டத்தில் கல்வியில் பல சாதனைகளைப் புரிகின்றவர்கள் படித்த பண்டிதர்களின் பிள்ளைகள் அல்லர். மாறாக ஓரளவு கல்வினை அறிவுக்காகக் கற்ற சாதாரண நடுத்தர வர்கத்தினைச் சாந்தவர்களின் பிள்ளைகளே கல்வியில் உயர்நிலை அடைகின்றனர்.இது அண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.கல்வியின் பெருமையினை அறிந்து கற்பவனே சிறந்த மகான் என்றாலும் கல்வி கற்பதற்கு உரம் ஊட்டுகின்ற காவேரி விளையாட்டுக் கழகத்தின் உயர்வான சமூகப்பணியானதுஇ வெறுமனே வார்த்தைகளால் புகழாரம் சூட்ட முடியாத அறப்பணியாகும்.கல்விக்கு உயிர் கொடுத்தவர் என்றும் மருணிப்பதில்லை அவர்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.இவ்வாறு பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீலாவணை சரஸ்வதி வித்தியால மண்டபத்தில் நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் தமிழ்ப் பாட நெறிக்கு பொறுப்பாக கடமையாற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.வரதராஜன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில் எந்தவொரு பிள்ளையும் கல்வியினை இடையூறுகள் இல்லாத நிலையில் பெறுவதற்கு உரிமை உண்டு அதனை யாராலும் தடுக்க முடியாது.பிறர் பிள்ளையினை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானாக வளரும் என்பது முது மொழி இதற்கு ஏற்ற வகையில் கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.அவ்வாறான தொரு விலை மதிப்புள்ள தர்மப்பணியினை காவேரி விளையாட்டுக்கழகம் செய்திருக்கின்றமை பாராட்டக் கூடிய விடயமாகும்.ஏழைக்கு எழுத்தறிவித்தவன் பாக்கியவாளன் உயிர்த் துடிப்பான இளைஞர்களின் சமூகப்பணியினை அளவிட முடியாது.