மட்டக்களப்பு இந்து கல்லூரியில் விஞ்ஞான தொழில்நுட்ப பீட திறப்பு விழா

(லியோன்)


கல்வி ராஜாங்க அமைச்சர்  மட்டக்களப்பு இந்து கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள   விஞ்ஞான தொழில்நுட்ப  பீடத்தை இன்று திறந்து வைத்தார்.


அறிவுமைய அபிவிருத்தியை உறுதி செய்து கொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு இந்து கல்லூரி  விஞ்ஞான தொழில்நுட்ப  பீடத்தை  கல்லூரி அதிபர் கே .அருள்பிரகாசம் தலைமையில் கல்வி ராஜாங்க அமைச்சர்  வி . ராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார் .


மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கு விஜயத்தை மேற்கொண்ட கல்வி ராஜாங்க அமைச்சரை வரவேற்கும் விசேட நிகழ்வுகள்  இன்று  கல்லூரியில் இடம்பெற்றது .   

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிக்கையில் வெளியில் இருந்து இந்த கிழக்கு மாகாணத்தை  பார்க்கும் போது மிக அழகாக இருக்கிறது ஆனால் இங்கு பிறகுதான் தெரிகின்றது கிழக்கு மாகாணத்தில் பல்வேறு குறைபாடுகள்  இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது .பாடசாலை கட்டிடங்கள் குறைபாடுகள் , பௌதீக வளங்கள் குறைபாடுகள் , ஆசிரியர் பற்றாக்குறைகள் காணப்படுகின்றது . நகர் புர பாடசாலைகளை  பார்கின்ற போது மட்டக்களப்பு நகர் பாடசாலைகளிலும் பல குறைபாடுகள் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது .

 எனவே இக்குறைபாடுகளை கட்டம்கட்டமாக தீர்க்க வேண்டிய நிலை இருக்கின்றது . எதிர்கால மாணவ சந்ததிகளுக்கு , கல்வி சமூகத்திற்கு தேவையானவற்றை செய்ய வேண்டிய  பொறுப்பு இந்த புதிய அரசாங்கத்திற்கு இருக்கிறது .

இந்த புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவும்  , பிரதம மந்திரி ரணில்விக்கிரம சிங்கவும்  தற்போது முனேற்றகரமான பாதையில் கொண்டு செல்வதை அவதானிக்ககூடியதாக உள்ளது .

இவர்கள் இருவரும் உணர்ந்து இருக்கின்றார்கள் இந்த முன்னேற்ற கரமான பாதைக்கு போக வேண்டும் என்றால் இந்த நாட்டினுடைய கல்வி வளர்ச்சியை முதலில் கொண்டு வரவேண்டும் என்று, இந்த கல்வி வளர்ச்சியை கொண்டு வருவதற்காக இவர்கள் மாற்று திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றார்கள் .

அதில் மிக முக்கியமான அம்சமாக தொழில்நுட்ப கல்வி அல்லது தொழில்சார்ந்த கல்விகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது கட்டாய திட்டமாக இருப்பதாக தெரிவித்தார் .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  ஞா .ஸ்ரீநேசன் . எஸ் .யோகேஸ்வரன் , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன்  , மாகாண சபை உறுப்பினரான  கருணாகரன் , மாகாண கல்விப் பணிப்பாளர்  நிசாம் ,மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் கே.பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன்   மற்றும் அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்.