பெற்றோலிய வள பிரதி அமைச்சர் மட்டக்களப்பு விஜயம்

(லியோன்)

இலங்கைப் பெற்றோலிய வள அமைச்சின் பிரதி அமைச்சர் திருமதி .அனோமா கமகே இன்று மட்டக்களப்பு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார் .

 இவரை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பிராந்திய அலுவலகம் தொகைச்சாலை  அதிகாரி கே . குகவர்த்தன் தலைமையில் இடம்பெற்றது .

 மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொண்ட பிரதி  அமைச்சர்  இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத வீதியிலுள்ள  ஸ்ரீ முத்துலிங்கம் விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகள் கலந்துகொண்டார் .

அதனை தொடர்ந்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது .

இந்த கலந்துரையாடலின் போது  அவர் உரையாற்றுகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த காலங்களில் பாரிய வீழ்ச்சி அடைந்த நிலையில் இயங்கி வந்துள்ளது . விசேட விதமாக கிழக்கு மாகாண பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை குறிப்பிடலாம் .

தற்போது எமக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது,  இந்த வாய்ப்பை பயன் படுத்தி கிழக்கு மாகாண பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை சிறந்த முறையில் முன்னேடுத்து செல்வதற்கு கூட்டுத்தாபனத்தில் கடமை புரிகின்ற ஒவ்வொரு ஊழியர்களின் பங்களிப்பு மிக அவசியமானது .
பெற்றோலிய கூட்டுத்தாபன அமைச்சு என்பது நமது நாட்டில் உள்ள அமைச்சிக்களின் சிறந்த ஒரு அமைச்சாகும் . இந்த  நாட்டின் பொருளாதார வளர்சிக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய பங்கு வகிக்கின்றது .

தற்போது இலங்கையில் இருக்கின்ற அமைச்சிக்களில் அதிக பிரச்சினைகள்  உள்ள அமைச்சாக இந்த அமைச்சி காணப்படுகின்றது . காரணம் வங்கிகளுக்கு  அதிக கடன் செலுத்த வேண்டிய நிலையில் இந்த கூட்டுத்தாபனம் உள்ளது .

எனவே இந்த நிலையில் இயங்கி வரும் இந்த கூட்டுத்தாபனத்தை வளர்ச்சி பெற இந்த கூட்டுத்தாபனத்தில்  பணிபுரியும் அனைவருக்கும் பாரிய பங்குன்று ,  தற்போது இந்த அமைச்சில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசு பாரிய பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றது .


எனவே எதிர் காலத்தில் சிறந்த முறையில் இந்த கூட்டுத்தாபனத்தை செயல்படுத்துவதற்கு முடியும் என தீர்க்கமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துக்கொண்டார் . இந்நிகழ்வில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் . செஹான் செனவிரட்ன, பெற்றோலிய விநியோக முகாமையாளர்  டப்ளியு . எம் .டி . டப்ளியு .எ . பண்டார மற்றும் மட்டக்களப்பு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பிராந்திய அலுவலகம் உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .