களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கலாசார திணைக்களத்தின் கொடி வார நிகழ்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியின் கீழ் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தினையும் மனிதாபிமானத்தினையும் கட்டியெழுப்பும் வகையிலான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடாத்தப்பட்டுவருகின்றன.

யுத்தத்தின் பின்னரான நல்லாட்சியில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடனும் நிம்மதியாகவும் வாழும் நிலையினை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் மதவிவகார கலாசார அலுவல்கள் அமைச்சின் விசேட திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஊடாக அமைதியான ஒழுக்கமான,முழுமையான சிறந்த மனிதர்களைக்கொண்ட தேசத்தினை ஒன்றுபட்டு கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வும் கொடி வார நிகழ்வும் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று(களுவாஞ்சிகுடி)பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று கலாசார உத்தியோகத்தர் த.பிரபாகரன் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி டிமாலின் நிராஜ் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது முதல் கொடியை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று(களுவாஞ்சிகுடி)பிரதேச செயலக பிரதேச செயலாளர் மா.கோபாலரட்னத்திற்கு அணிவிக்கப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பிரதேச கலாசார அதிகாரசபையினை பலப்படுத்தும் வகையில் இதன்போது கொடிவிற்பனையும் ஸ்டிக்கர் விற்பனையும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.