இளைஞர் சேவைகள் மன்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட மண்டபம் கையளிப்பு

லியோன் )



2015  இளைஞர் பாராளுமன்றத்திற்கு இணையாக “ துருனு சிரம சக்தி “ தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பல கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .


 இதன் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜனாப் எம் .எல் .எம் .என் . நைரூஸின் வழிகாட்டலில்  தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இ .ஜெ.பயஸ் ராஜின் நிதி ஒதுக்கீட்டில்  இளைஞர்  சேவைகள் மன்றம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பூரண பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்ட “துருனு சிரம சக்தி” தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பெரிய உப்போடை  கிராம சேவை பிரிவில் உள்ள  மக்கள் மற்றும் இளைஞர் ஒன்று கூடல் மண்டபம் புனரமைப்பு செய்யப்பட்டது .

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பூரண பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட மக்கள் மற்றும் இளைஞர் ஒன்று கூடல் மண்டபமானது இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜாவினால்  இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்திற்கு கையளிக்கப்பட்டது .

இன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜனாப் எம் .எல் .எம் .என் . நைரூஸ், மாவட்ட இளைஞர் சேவை  மன்ற உத்தியோகத்தர்களான  திருமதி .ஜெ .ஆர் .கலாராணி , திருமதி . எ . நிஷாந்தி . புளியடிகுடா செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி லோரன்ஸ் , இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இ .ஜெ.பயஸ் ராஜ் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் இளைஞர் கழக பிரதேச சம்மேளன இளைஞர்களும்  ஹரி இல்ல மாணவர்களும் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வின் போது இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தினால் ஹரி இல்ல மாணவர்களும் பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.