“விளையாட்டு உடல் ஆரோக்கிய விருத்தி “ உடல் பயிற்சி விளையாட்டு நிகழ்வு

(லியோன் )


ஆரோக்கியமான நாட்டையும் ,நாட்டு மக்களை  உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனைக்கு   அமைவாக தேசிய ரீதியில் 25 ஆம் திகதி தொடக்கம்   30  ஆம் திகதி வரை  உடல் பயிற்சி வாரமாக  அனுஸ்டிக்கப்படுகின்றது.


இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால்  “விளையாட்டு உடல் ஆரோக்கிய விருத்தி" வாரம் எனும் தலைப்பில் உத்தியோகத்தர்களின் உடல் பயிற்சி விளையாட்டு நிகழ்வுகள் இன்று  இடம்பெற்றது . .

இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது . 

இடம்பெற்ற உடல்பயிற்சி விளையாட்டு நிகழ்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்.