கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கட் அணி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் இலங்கை கிரிக்கட் சபையினால் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட 13வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அணி ஒன்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 13வயதுக்குட்பட்ட அணியே கால் இறுதிப்போட்டிக்குள் உள் நுழைந்துள்ளது.

கால் இறுதிப்போட்டிக்குள் உள்வாங்கப்பட்டதை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு சன்சயின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் டி.ஏ.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கிரிக்கட் சங்கத்தின் தலைவர் என்.பி.ரஞ்சன்,செயலாளர் வி.பிரதீபன், மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் வை.கோபிநாத்,கிரிக்கட் சபையின் மாவட்ட பயிற்றுவிப்பாளர் அன்வர்டின்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ரி.மகிழ்நம்பி,பாடசாலை அதிபர் பி.விமல்ராஜ்,பாடசாலை பழைய மாணவரும் கிரிக்கட்சபை உறுப்பினருமான கிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்பாறை,திருகோணமலை,பொலநறுவை,யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச அணிகளுடன் விளையாடி பல சாதனைகளை இந்த அணி படைத்துள்ளதுடன் காலிறுதிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் முதல்முறையாக 13வயதுக்குட்பட்ட அணி கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் போட்டியில் பங்குகொண்டு காலிறுதிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமையென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.