சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம் பெயர்தலை மட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

(லியோன்)


அம்கோர் நிறுவனம்  சமூக அபிவிருத்தியை நோக்காக கொண்டு இயங்கும் தேசிய  ரீதியில் பதிவு செய்யப்பட ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகும் , இந் நிறுவனத்தின் அனுசரணையில் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சமூக வாழ்வாதார  அபிவிருத்தி தொடர்பிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .


இதன் கீழ் அம்கோர் நிறுவனம் சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம் பெயர்தலை மட்டுப்படுத்தல்  எனும் கருத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டின் வாழும்  பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் சுயதொழில் கடன் உதவி தொடர்பான  கலந்துரையாடல் நிறுவன வாழ்வாதார கள உத்தியோகத்தர் எம் . மயிலாசன் தலைமையில் மகிழூர்முனை  பாலர் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.


பாதுகாப்பற்ற முறையிலான புலம் பெயர்தல் மூலம் சமூகம்  முகம்கொடுக்கின்ற வாழ்வாதார பிரச்சினைகள் . இதனால் ஏற்படுகின்ற குடும்ப பாதிப்புகள் மற்றும்  வாழ்வாதார பின்னடைவுகள்  போன்ற விடயங்கள் தொடர்பிலான தெளிவூட்டல்களும், இவற்றிக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில்  அம்கோர் நிறுவனத்தினூடாக வழங்கப்பட்டு கடன் உதவி திட்டங்கள் மூலமாக பெற்றுக்கொண்ட கடனை எவ்வாறு  மீள் செலுத்துவது  தொடர்பிலான ஆலோசனைகள்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெளிவூட்டப்பட்டது .


 இந்நிகழ்வில் மகிழூர்முனை கிராம சேவை உத்தியோகத்தர் எல் . மதிகரன் , அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர் .