பொலித்தின் பாவனையினை தடைசெய்யும் வகையில் பொலித்தின் பைகளுக்கு மாற்றிடான பை அறிமுகம்

 (லியோன்)


இலங்கையின் இருந்து முற்றாக பொலித்தின் பாவனையினை முற்றாகஒழிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தின் முதல் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது .


மட்டக்களப்பு மாநகர சபையினால் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு பொதுச்சந்தையில் நடைபெற்றது .

 மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என் . தனஞ்செயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் . 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர்  வி .தவராஜா உட்பட வைத்திய அதிகாரிகள் ,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் . 


ஜனதாக்சன் நிறுவனம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .

பொலித்தின் பைகளுக்கு மாற்றிடான பை அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன .

அத்துடன் பொதுச்சந்தை பகுதியில் பொலித்தின் பாவனையினை தடைசெய்யும் வகையில் மாற்றிடான பை விற்பனை நிலையமும் இங்கு திறந்து வைக்கப்பட்டது .