வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்

(லியோன்)


மட்டக்களப்பு  கல்வி  வலயத்திற்குட்பட்ட  வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின்  வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்  இன்று பிற்பகல்  02.00 மணியளவில் பாடசாலை அதிபர்  திருமதி இராஜகுமாரி கனகசிங்கம்  தலைமையில் வெபர் விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது . 


 ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை பாடசாலை மாணவர்களால் மாலை அணிவித்து  அழைத்து வரப்பட்டனர்.

இதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்ல கொடிகள் ஏற்றி பாடசாலை கீதம்  இசைக்கப்பட்டது.

விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்வுகள் மாநகரசபை ஆணையாளரினால் வைபோக ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இன்று இடம்பெற்ற  இல்ல விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள்  நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளினால் வழங்கப்பட்டது.

.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம் . உதயகுமார் கலந்துகொண்டார் .


இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரிகளான உதவி கல்விப் பணிப்பாளர்  த .யுவராஜா ( தமிழ் ) உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி . எஸ் . கங்கேஸ்வரன் (கல்வி அபிவிருத்தி ) மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன்,காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெலகெதர மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள வெபர் விளையாட்டு மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டு   நான்கு வருடங்களின் பின் ஆரம்ப விளையட்டு போட்டி நிகழ்வாக இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .