மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இன ஐக்கிய பொங்கல் விழா

இன ஐக்கியத்தினை ஏற்படுத்தும் வகையிலான மாபெரும் பொங்கல் விழா இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

கல்வி அமைச்சு மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் இந்த தைப்பொங்கல் விழா இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி அன் நாசர் வித்தியாலய இஸ்லாமிய மாணவர்களும் விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய தமிழ் மாணவர்களும் இணைந்து இந்த பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.

இனங்களிடையே நல்லுறவையும் இனங்களுக்கிடையிலான நல்லுறவினையும் ஒரு இனம் இன்னுமொரு இனத்தின் கலைகலாசாரங்கள் பாரம்பரியங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவினால் இந்த பொங்கல் விழா நடாத்துவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ்,காத்தான்குடி அன் நாசர் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அல்லாபிச்சை,மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் கங்கேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இரு இன மாணவர்களினதும் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் தைப்பொங்கல் தொடர்பில் விசேட கருத்தரைகளும் வழங்கப்பட்டன.