முன்னாள் அமைச்சர் அமரர் வி.நல்லையா மாஸ்டரின் வாழ்கை வரலாறை வெளிப்படுத்தும் “வாழும் மனிதர்” நூல் வெளியீட்டு நிகழ்வு

மட்டக்களப்பின் கல்வியின் தந்தை எனப்போற்றப்படும் முன்னாள் அமைச்சர் அமரர் வி.நல்லையா மாஸ்டரின் வாழ்கை வரலாறை வெளிப்படுத்தும் “வாழும் மனிதர்” நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு,ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் சுவாமி விபுலானந்தர் மண்டபத்தில் நல்லையா நினைவுப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நல்லையா நினைவுப்பணி மன்றத்தின் தலைவர் வி.லட்சுமிசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முதல்வர் எஸ்.யோகராசா, அமரர் நல்லையா மாஸ்டரின் மகள் நளினி காசிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அமரர் வி.நல்லையா மாஸ்டரின் உருவச்சிலைக்கு நல்லையா நினைவுப்பணி மன்றத்தின் தலைவர் வி.லட்சுமிசுந்தரத்தினால் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வில் நூல் வெளியீட்டை சசிதரன் விரேஸ்வரன் முதல் பிரதியைப்பெற்று ஆரம்பித்துவைத்தார்.

நிகழ்வின் தலைவர் தலைமையுரையாற்றியதுடன் “வாழும் மனிதர்” நூலை தொகுத்தளித்த கவிக்கோ வெல்லவூர் கோபாலினால் நூலின் பதிப்புரை நிகழ்த்தப்பட்டது.