2015 ஆம் ஆண்டுக்கான மாகாண சபை வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன் )


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும்  நோக்குடன் பல  ஊக்குவிப்பு உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன .


இதன் கீழ் கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன ,கால்நடை உற்பத்தி அபிவிருத்தி , மீன்பிடி , கூட்டுறவு அபிவிருத்தி , உணவு வழங்கல் விநியோகத்திற்குமான அமைச்சரின்  2015 ஆம் ஆண்டுக்கான   மாகாண சபை வரவு செலவுத்திட்டத்தின்   நிதி ஒதுக்கீட்டின் ஊடாக  சுயதொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்படுத்து நோக்குடன் உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

 இதன் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தின்  14  பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட   சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு நேற்று மாலை அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது .

இதன் போது சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தையல் இயந்திரங்கள் , சோளன் பொறி தயாரிக்கும் இயத்திரம் , தச்சு வேலை செய்பவர்களுக்கான மின்சார சீவுளிகள் , உணவு உற்பத்தி செய்பவர்களுக்கான ஏறி வாய்வு அடுப்புகள் அதனுடன் உணவு தயாரிக்கும் உபகரணங்கள், வர்ணம் பூசுவதற்கான உபகரணம்  போன்ற சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது .

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கிருஸ்ணப்பிள்ளை துரைராசசிங்கம் கலந்துகொண்டதுடன் அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் தங்கவேல் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் , பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .