மட்டக்களப்பு முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்ட நீச்சல் பயிற்சி நெறியை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
றிவேரா நீச்சல் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவந்தன. மட்டக்களப்பு றிவேரா ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவந்தன.
தேசிய நீச்சல் பயிற்சியாளர் சங்கத்தின் அனுசரணையுடன் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமான இந்த பயிற்சி நெறியில் 15குழுக்களினை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட 05வயதுக்கும் 15வயதுக்கும் உட்பட்ட பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டன.
றிவேரா நீச்சல் கழகத்தின் தலைவர் தேவதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன்,பீச்ச மைன்ட் நிறுவகத்தின் பணிப்பாளர் வி.மனோகரன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் பிரசாத்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ரூபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட நீச்சல் பயிற்றுவிப்பாளர் தங்கத்துரை சோமஸ்காந்தன் நெறிப்படுத்தியிருந்தார்.