தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.மு.இராசமாணிக்கத்தின் பெயரிலான சீ.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு என்னும் ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று களுவாஞ்சிகுடியில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கல்வி,பொருளாதார முன்னேற்றத்தினை கருத்தில்கொண்டு இது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப வைபவம் இன்று காலை களுவாஞ்சிகுடி நகரில் உள்ள அமரர் இராசமாணிக்கத்தின் சிலையருகில் நடைபெற்றது.அவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
அதனைத்தொடர்ந்து சீ.மு.இராசமாணிக்கத்தின் பெயரிலான சீ.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
அலுவலகம் திறப்பினை தொடர்ந்து இராசமாணிக்கம் மண்டபத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.களுவாஞ்சிகுடி ஆலயங்களின் தலைவர் எஸ்.கந்தவேள் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.சுகுணன்,முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.பத்மநாதன்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் லால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் அமரர் இராசமாணிக்கத்தின் புத்திரர்களான கீர்த்திவர்மன் இராசமாணிக்கம்,இராஜபுத்திரன் இராசமாணிக்கம்,வதினி இராசமாணிக்கம்,மதினி இராசமாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சீ.மு.இராசமாணிக்கத்தின் பெயரிலான சீ.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பிற்கான முதல் கட்டநிதியாக 50மில்லியன் ரூபாவினை கீர்த்திவர்மன் இராசமாணிக்கம் வழங்கியுள்ளார்.
வறுமை நிலையில் உள்ளவர்கள் நிலையான பொருளாதார மேம்பாடுகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்றிட்டங்கள் இதன் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன் வறிய நிலையில் உள்ள குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்கும் இந்த அமைப்பின் ஊடாக உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வின்போது முதல் கட்டமாக 400பேருக்கான வாழ்வாதார உதவிக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.