உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு பெற்று இன்று காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலையில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 455,520 நபர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 447 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன். நாளை காலை 7:00 மணி முதல் 4.00 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த முடியும் என்பதுடன். வாக்குகளை எண்ணுவதற்காக 144 வாக்கெண்ணும் நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்கு நிலையங்கள்,வாக்கெண்ணும் நிலையங்களில் கடமையாற்றுவதற்காக சுமார் 6000அரச ஊழியர்கள் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு தேர்தல் செயற்பாடுகளுக்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.