பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பப் பிரிவு ஊட்டற் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை கடுமையான பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் இடம்பெற்றது.
ஏறாவூர் வாளியப்பா தைக்கா பள்ளிவாசல் காணிக்குள் பாடசாலை ஒன்று அமைக்கும் விடயமாக சுமார் ஒருவருடத்துக்கும் மேலாக பல்வேறு சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில் இப்பொழுது பொலிஸ் பாதுகாப்புடன் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அதிகாரிகளால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
பள்ளிவாசல் பராமரிப்பிலுள்ள இக்காணிக்குள் பாடசாலை அமைக்க இடமளிக்கமாட்டோம் என்று பள்ளிவாசல் நிருவாகம் புதிய பாடசாலை அமைக்க முயற்சித்த பாடசாலை அபிவிருத்திக் குழுவினருடன் முரண்பட்டு வழக்கு நீதி மன்றம் வரைச் சென்றது.
பள்ளிவாசல் நிருவாகத்தினர் பள்ளிவாசல் காணியின் ஒரு ஓரமாக புதிய ஊட்டற் பாடசாலையை அமைக்க நீதிமன்றில் சம்மதம் தெரிவித்ததாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அடிக்கல் நாட்டி வைப்பு நிகழ்வின் போது பள்ளி வாசல் நிருவாகம் மற்றும் பொதுமக்களுக்கும் புதிய பாடசாலை அமைக்கும் பயணியிலீடுபட்டுள்ள தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படாதிருக்க முற்கூட்டியே பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டிருந்த நிலையில் பள்ளிவாசல் சூழலைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எனினும் எதுவித குழப்பமுமின்றி பாடசாலைக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு சுமுகமாக இடம்பெற்றதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.