பெரியக்கல்லாறு மத்திய கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ. த உயர் தர பரீட்சைப் பெறுபேறு வெளிவந்துள்ள நிலையில் 46 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். இவற்றுள் பொறியியற் துறைக்கு ராகுலன் சண்முகபிரியன், மருத்துவ துறைக்கு றொசைறோ சோபிநாத், வரதராஜன் ரிதுப்பிரசிக்கா ஆகிய இரு மாணவர்களும், முகாமைத்துவத் துறைக்கு ஞானசிறி பிரகீத், கலைத் துறைக்கு 04 மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானத் துறைக்கு 05 மாணவர்களும், பௌதிக விஞ்ஞானத் துறைக்கு 05 மாணவர்களும், பொறியியற் தொழில்நுட்பத் துறைக்கு 02 மாணவர்களும், உயிர் முறைமையியல்த்தொழில்நுட்பத் துறைக்கு 03 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் கற்பித்த ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகம் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.