மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கருவப்பங்கேணி கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழகம் தனது 27வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழகம் தனது 27வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் இந்த மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டியை நடாத்தியது.
இந்த சுற்றுப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குகொண்டதுடன் இறுதிப்போட்டிக்கு கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகமும் காத்தான்குடி அக்ரம் விளையாட்டுக்கழகமும் தெரிவுசெய்யப்பட்டது.
பத்து ஓவர்கள் கொண்ட இந்த சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிகொண்ட கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகம் களத்தடுப்பினை தேர்வுசெய்தது.
இதனடிப்படையில் நடைபெற்ற போட்டியில் காத்தான்குடி அக்ரம் கழகத்தினர் 10 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கூழாவடி டிஸ்கோ கழகத்தினர் 7.2 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 67 ஓட்டங்களைப்பெற்று வெற்றி இலக்கினை அடைந்தனர்.
இந்த சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகத்தின் சஞ்சிவும் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக கூழாவடி டிஸ்கோ கழகத்தின் கிளிப்பட் தெரிவுசெய்யப்பட்டதுடன் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக சஸ்டேஸ் விளையாட்டுக்கழகத்தின் நிவோ தெரிவுசெய்யப்பட்டார்.
இறுதிப்பரிசளிப்பு நிகழ்வு கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றபோது நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கலந்துகொண்டார்.
அழைப்பு அதிதியாக கறுவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் அதிபர் ஞா.சபேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது கழகத்திற்கு சேவையாற்றிய கழக உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதுன் வெற்றிபெற்ற அணிகளுக்கு கிண்ணங்களும் பணப்பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.