மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திராய்மடு கிராமத்தில் வீட்டுக் கிணற்றிலிருந்து மிதந்த நிலையில் மீனவவரின் சடலம் திங்கட்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
திராய்மடு கிராமத்தைச் சேர்ந்த நேசதுரை பேணார்ட் (வயது 54) எனும் மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான மீனவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில நாட்களாக நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்தள்ளது.
அவரது வீட்டுவளவிலுள்ள கிணற்றிலிருந்தே சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.