மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பாலமுனையை சேர்ந்த தி.டிரோசன்(22வயது)என்ற இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் பின்புறமாகவுள்ள கூரைப்பகுதியிலேயே இவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் காதல் பிரச்சினை காரணமாகவே இவர் தூக்கிட்டு தற்கொலைசெய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.