தேர்தலில் வாக்களித்து விட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி காயமடைந்தவர் உயிரிழப்பு

வாழைச்சேனை நாவலடியில் கடந்த 17.08.2015 அன்று தேர்தலில் வாக்களித்துவிட்டு தொழிலுக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தவர் ஞாயிறன்று மரணமாகியுள்ளார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.


காத்தான்குடியிலிருந்து தொழில் நிமித்தம் கதுறுவெலைக்கு சென்று கொண்டிருந்தபோது வாழைச்சேனை பொலிஸ பிரிவிலுள்ள – நாவலடியில் இந்த விபத்து இடம்பெற்றது.

படுகாயமடைந்த எம்.எம். றஸ்லான் (வயது 29) எனும் ஒரு குழந்தைக்குத் தந்தையான இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.