சித்தாண்டி விநாயகர் கிராம நாகன்னி அம்மன் ஆலய உற்சவ திருக்கதவு திறத்தல்

மட்டக்களப்பு, சித்தாண்டி விநாயகர் கிராம அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய 25வது வருடாந்த உற்சவ பெருவிழா இன்று (18) வியாழக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மடைப்பெட்டி எழுந்தருளச் செய்த திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.


நடைபெற்றுவரும் திருவிழாவில் மாவடிவேம்ப மக்களின் இரண்டாம் நாள் திருவிழாவானது வெள்ளிக்கிழமை (19) நடைபெறவுள்ளதுடன் சித்தாண்டி -1, விநாயகர் கிராம கிழக்கு மக்களினால் மூன்றாம் நாள் (சனிக்கிழமை -20) திருவிழாவும், நான்காம் நாள் திருவிழாவை பட்டெடுத்தல், 108 சங்காபிசேகத்துடன் என்பன விநாயகர் கிராம மத்தி வாழ் மக்களினால் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற இருக்கின்றது.

மஞ்சள், நீர், பாற்குட பவனி சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்டு அபிசேக ஆராதனை மற்றும் அம்மான் வள்ளி வட்டாரம் என்பன விநாயகர் கிராம மேற்கு வாழ் மக்களின் திருவிழாவில் திங்கள் கிழமை (22) இடம்பெறவுள்ளது.

இறுதி நாளாகிய செவ்வாக்கிழமை தீ மிதித்தலுடன் அம்மனின் திருவிழாக்கள் அனைத்தும் இனிதே நிறைவுபெறவுள்ளது.

ஆலயத்தில் நடைபெறும் அனைத்து ப+சைகளும் பிரதம குரு ஜீவராஜ் ஐயா உட்பட நாககன்னி அம்மன் ஆலய நித்திய பிரதம குரு குமாரசாமி ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற்றுவருகின்றது.