வில்பத்து பகுதியில் காணிகள் அபகரிக்கப்பட்டதுபோன்று மட்டக்களப்பிலும் பாரிய அபகரிப்பு மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் எஸ்.மாசிலாமணி,முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கான முகாம்களா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை இரவு அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்தார்,
வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாராமுனை பகுதியானது பிரகடனப்படுத்தப்பட்ட காட்டுப்பகுதியாகும்.பாதுகாக்கப்பட்ட பகுதி,உத்தரவின்றி உட்செல்லவேண்டாம் என்ற பதாகையும் இடப்பட்டுள்ளது.ஆனால் அந்த காட்டுப்பகுதி டோசர்மூலம் துப்புரவுசெய்யப்பட்டு அங்குள்ள மரங்கள் மூலம் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.வில்பத்து காட்டுப்பகுதியில் எவ்வாறு காணிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதோ அதேபாணியில் இங்கும் காணிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
மக்கள் கடவுகளாக கருதும் அரசியல் தலைமைகளும் இது தொடர்பில் பாராமுகமாகவே இருந்துவருகின்றனர்.
இதேபோன்று 30 ஏக்கர் காணிகள் முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இராணுவத்தினர் வந்தே இந்த காணியை பெற்றுக்கொண்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம்சாதிப்பது எங்களுக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பொறுப்புக்கூறவேண்டிய கடமையுள்ளவர் அரசாங்க அதிபர்.
இதுபோன்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவின் கறுவாக்கேணியிலும் காணி உறுதிகள் கொண்ட 54 தமிழர்களின் காணிகளை அத்துமீறி அபகரிப்பு செய்து அங்கு பெரியபெரிய தென்னை மரங்களை நட்டுள்ளனர்.நீண்டகாலமாக தாங்கள் வசிப்பதாக காட்டவே இவ்வாறு செய்துள்ளனர்.
இவ்வாறான நிகழ்வுகள் இந்த மாவட்ட செயலாளருக்கோ,பிரதேச செயலாளருக்கோ தெரியாமல் நடந்துள்ளதா.அந்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது யாரும் சென்று கேட்காத நிலையே உள்ளது.என்ன நடந்தது என்று கேட்பதற்கு கூட எமது அரசியல்வாதிகள் முன்வரவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வெள்ள நிவாரணத்துக்கு வந்த பணத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் பிள்ளையானுக்கும்,ஹிஸ்புல்லாவுக்கும்,கருணாவுக்கும்,அமீரலிக்கும் பிரித்துக்கொடுத்துள்ளார். தற்போது பிரதேச செயலாளர்களிடம் கணக்கினை கோரி நிற்கின்றார்.
அதன் காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் உடனடியாக மாற்றப்பட்டார். வெல்லாவெளி பிரதேச செயலாளர் மாற்றப்படவுள்ளார்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக சில விடயங்களை கூறமுற்படுவோர் பழிவாங்கப்படுகின்றனர்.இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.தடயங்கள் அழிக்கப்படுகின்றது.பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் காணிகளை நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.முன்னைய பிரதேச செயலாளர் வழங்கமுடியாது என்று கூறியபோது அவர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் நியமிக்கப்பட்டதும் முதல் தூக்கியதே அந்த கோப்பைத்தான்.
அன்று இரவே பிரதேச செயலகத்தின் காணி பகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.இதன் பின்னணி யார்? இதில் அரசியல் பின்னணி இல்லாமல் இருக்கமுடியாது.இது எங்காவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
நான் ஒரு அமைப்பாளராக மட்டுமே உள்ளேன்.எனக்கு மக்கள் ஆணை தரவில்லை.அதன் காரணமாக நான் ஒரு சாதாரண பிரஜைதான்.ஆகவே இவ்வாறான விடயங்களை தடுப்பதற்கு நாங்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுசேரவேண்டியுள்ளது.
வில்பத்து காடுப்பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம்கள் சிலர் வந்திருந்தனர். வாகரைக்கும் வெருகலுக்கும் இடையில் சுமார் 650 ஏக்கர் காணிகள் உடைய தீவுப்பகுதியை அப்படியே அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவற்றினை அபகரித்தார்.அங்கு அரபு நாட்டை சேர்ந்தவர்கள் எல்லாம் வருகைதந்தனர். வாரம் வாரம் விருந்துகள் எல்லாம் நடைபெற்றது. அந்தவேளையில் இராணுவத்தினர் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டது என்ற பதாகையினை நட்டபோதே அது தடுத்து நிறுத்தப்பட்டது.
இராணுவத்தினை பிழையாக கூறப்பட்டுவரும் நிலையில் என்னைப்பொறுத்தவரை அந்த நிலத்தினைப்பாதுகாத்தது இராணுவமே.அந்த பதாகை இடத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு யாரும் வருவதில்லை.அங்கு வீதிக்காக ஒதுக்கப்பட்ட பணம் தற்போது கேணி நகருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இருக்க இடம் என்றால் காணிகளை பிடிப்பது நியாயம் ஆகும்.ஆனால் வெளிநாட்டை சேர்ந்த முஸ்லிம்கள் இங்கு வந்து காணிகளை பார்வையிடுவது பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு முஸ்லிம் நாடுகளைச்சேர்ந்தோர் இங்குவருகின்றனர். இவ்வாறானநிலையில் பயங்கரவாதிகளை மறைத்துவைப்பதற்கான காடுகளை தேடுகின்றார்களா என்ற சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது. சில வேளைகளில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிப்பதற்காகவும் இவ்வாறான காடுகளை தேடலாம் என்ற சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.மீண்டும் இந்த மாவட்டத்தினை யுத்தபூமியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா? எனற சந்தேகமும் உள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பின் சொத்தாக இருக்கின்ற வாழைச்சேனை காகித ஆலையினை இல்லாமல்செய்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதனை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிகின்றோம்.
இந்த நாட்டில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் இணைந்தே புதிய ஆட்சியை ஏற்படுத்தினர். ஆனால் அமைச்சர் ரிசாத் பதியுதினும் அமீரலியும் முஸ்லிம் மக்களை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இனங்களிடையே பிளவினையே ஏற்படுத்தும்.