மட்டக்களப்பில் இருவேறு சம்பவங்களுக்காக விடுக்கப்பட்ட ஹர்த்தால் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு தரப்பினர் இரு வேறு சம்பங்களுக்காக விடுத்த அழைப்பின் அடிப்படையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.


நாம் திராவிடர் கட்சி பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தரை தாக்கியதை கண்டித்து இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதேபோன்று மட்டக்களப்பு வர்த்தக சங்கம் புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலைசெய்ய்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

தமிழ் முஸ்லிம் பகுதிகளில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததுடன் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன.

போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்துசபை பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டிருந்தது.தனியார் போக்குவரத்துச்சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.