மட்டக்களப்பு வந்தாறுமூலையில் காவியா பெண்கள் அமைப்பினால் அமைக்கப்பட்ட நாச்சியார் உணவகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த நாச்சியார் உணவகத்தை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். இதில் உணவகம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
இது குறித்து ஏறாவூர் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காவியா பெண்கள் அமைப்பின் ஊடாக மாவட்டம் தோரும் கணவனை இழந்த பெண்களின் வருமானத்திற்காக நாச்சியார் பாரம்பரிய உணவக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகமே தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தின் ஊடாக பத்திற்கு மேற்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.