புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை செய்தியானது அனைவரது மனங்களையும் மிகவும் கஸ்டத்திற்குள்ளாக்கியுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எந்த தயவுதாட்சண்யமும் யாரும் காட்ட முன்வரக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புங்குடுதீவு மாணவியின் படுகொலையானது ஈனச்செயலின் உச்சக்கட்டமாகும்.இவ்வாறான செயல்களை புரிந்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்கவேண்டும்.இவர்கள் மீது எவரும் தயவுதாட்சண்யம் காட்டக்கூடாது.
இந்த சம்பவமானது தமிழ் சமூகத்துக்கு நல்ல படிப்பினை தந்துள்ளது.இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் எமது சமூகம் எந்த நிலையில் உள்ளது என்பதை அனைவருக்கும் ஒரு செய்தியாகவும் உள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாதவகையிலான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.
இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றேவருகின்றது. இவற்றினை தடுப்பதற்கான விழிப்புணர்வினையும் வழிநடத்தல்களையும் மேற்கொள்ளாததாகவே இருந்துவந்துள்ளோம்.
எமது எதிர்காலத்தில் எமது செல்வங்களை பாதுகாக்கதேவையானவை தொடர்பில் எமது சமூகம் சிந்திக்கவேண்டும்.
இவற்றினை யாரும் அரசியல்மயப்படுத்தமுனையக்கூடாது.சிலர் இந்த சம்பவங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தமுனைவதை காணமுடிகின்றது.இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
பாடசாலை மாணவிகளுக்கு பாடசாலைகளில் தங்களை பாதுகாப்பதற்கான விசேட செயற்றிட்டங்களை கல்வி திணைக்களம் மேற்கொள்ளவேண்டும்.
இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட எண்ணுவோர் அதனை கனவிலும் நினைக்காதவகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் ஏற்படுத்தவேண்டும்.
உயிரிழந்த மாணவியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.