புனித மைக்கேல் கல்லூரியில் வண பிதா கேபியர் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி பழைய மாணவ சங்க ஏற்பாட்டில்  வண பிதா கேபியர் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட 4 வது வருட சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி வண பிதா கேபியர் அரங்கில் இடம்பெற்றது .இப்போட்டியானது தொடர்ந்து  22,23,24ஆம் திகதி வரை இடம்பெறும் .


ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் .சார்ள்ஸ் ,அருட்தந்தை போல் சற்குணநாயகம் ,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் மா அதிபரின் பிரதி செயலாளர் இந்திக்க சில்வா ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர் .

இப்போட்டியின் இறுதி போட்டி நாளை 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது .  இபோட்டிகளில் 08 அணிகள் பங்குபற்றுகின்றன , மட்டக்களப்பு ,யாழ்பாணம் ,ஸ்ரீலங்கா பொலிஸ் ,ஸ்ரீலங்கா ஆர்மி ,மொரட்டுவ வை.எம்.சி, ஓல்ட் பென்ஸ் கழகம்  கொழும்பு ,டிலா சாலியன்  கொழும்பு , அகில இலங்கை பல்கலைகழக அணிகள் ஆகியன பங்குபற்றுகின்றன .