புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடை குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு யாரும் முன்வரக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கொலைச்சம்பவத்தினை கண்டித்தும் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
கோட்டைக்கல்லாறு மற்றும் பெரியகல்லாறு ஆலயங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியும் ஆர்ப்பாட்டத்தினையும் நடாத்தினர்.
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் பெரியகல்லாறு மெதடிஸ்த தேவாலயத்துக்கு அருகில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணியும் கோட்டைக்கல்லாறு பாலத்தடியில் ஒன்றிணைந்து அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மாணவியின் தாக்குதலுக்கு எதிரான கண்டன பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததுடன் கண்டன கோசங்களும் எழுப்பப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,
அதிகளவான மதுபாவனையே இவ்வாறான கொடூர செயல்களுக்கு காரணமாகின்றது.வித்தியாவின் படுகொலை வடகிழக்கு மட்டுமல்ல முழு இலங்கை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நாட்டில் நிலவும் நல்லாட்சி காரணமாகவே இன்று மக்கள் சுதந்திரமாக தமது எதிர்ப்பினை நடாத்தமுடிகின்றது.யாழில் நீதிமன்றம் தாக்கப்பட்டபோது அவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர்.