மாணவர்களை ஏற்றிச்சென்ற டிப்பர் விபத்துகுள்ளானதில் மூன்று மாணவர்கள் படுகாயம் -தேற்றாத்தீவில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று காலை தேற்றாத்தீவில் உள்ள பாடசாலையில் இருந்து தேற்றாத்தீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் சிரமதானத்துக்கு மாணவர்களை ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதன்போது மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.