துறைநீலாவணையில் சீர்பாததேவியின் சிலை திறந்துவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட துறைநீலாவணையில் கிழக்கிலங்கையின் சிற்றரசியாக இருந்த சீர்பாததேவிக்கு அமைக்கப்பட்ட சிலையை திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் சொந்த நிதியொதுக்கீட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை திறந்துவைக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.கலையரசன் மற்றும் முன்னாள் கல்முனை நகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உலகெங்கும் வாழும் சீர்பாத குலத்தினை தோற்றுவித்தவராக சீர்பாததேவி அரசு இருந்துவருவதுடன் நூறு வீதம் சீர்பாததேவியின் வழித்தோன்றல்கள் வாழும் பிரதேசமாக துறைநீலாவணை இருந்துவருகின்றது.

இந்த சிலை திறப்பு விழாவில் பெருமளவான பொதுமக்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.