கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை

கிழக்கு மாகாண பாடசாலைகள் மட்டத்தில் நடைபெற்றுவரும் விளையாட்டு போட்டிகளில் பூப்பந்தாட்ட போட்டியில் 19வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரி முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்டது.


குருக்கள்மடம் மகா வித்தியாலய உள்ளக அரங்கில் நடைபெற்ற போட்டியிலேயே இந்த சாதனையினை பெரியகல்லாறு மத்திய கல்லூரி மாணவர்கள் படைத்துள்ளனர்.

அத்துடன் 15வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் இரண்டாவது இடத்தினையும் பெரியகல்லாறு மத்திய கல்லூரி பெற்றுள்ளது.

பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் வி.திருச்செல்வம் மற்றும் திருமதி யு இராஜரத்தினம் ஆகியோரின் வழிகாட்டலில் பூப்பந்தாட்ட பயிற்சியாளர் ரி.புருசோத்தமனால் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இவர்களுக்கு பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.