கண்ணகி கலை இலக்கிய விழா 2015ற் ஆன ஆரம்பக்கூட்டம் இன்று திங்கள்கிழமை (4) மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கியக் கூடல் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில் வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
கண்ணகி தொடர்பான கலை இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல் .
பண்டைய காலம் தொடக்கம் இன்று வரை யின்றுவரும் கண்ணகி தொடர்பான தொன்மங்களை மீட்டும் பார்த்தல், கிழக்குகிழங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணர்தல், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் குறிப்பாக கிழக்குpழங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையோன பொதுமைகளை ஆராய்தல் ஆகிய நோங்கங்களை கொண்டு 2011இல் ஆரம்பிக்கப்பட்ட ‘கண்ணகி இலக்கிய விழா’ அவ்விழாவின் தொடக்க விழா அன்று (2011.06.18) வெளியிடப்பெற்ற கண்ணகி இலக்கிய விழாப் பட்டயத்திற்கு அமைவாக வருடம்தோறும் நடாத்ப்பட்டு வருகின்றது.
இதனை முன்னெடுக்கும் பொருட்டு உருவாக்கப்பெற்ற ‘கண்ணகி கலை இலக்கிய கூடல்’ என்ற அமைப்பு முதலாவது கண்ணகி இலக்கிய விழாவை ‘கண்ணகி இலக்கிய விழா’ என்ற தலைப்பில் 2011 தொடக்கம் 2014 வரை நடைபெற்றுவருகின்றது.
பாராம்பரிய கலை வடிவங்களையும், இலக்கியங்களையும், பண்பாட்டுவிழுமியங்களையும், மீளக் கட்டமைத்துப் பேணி வளர்த்தெக்கும் மற்றும் எதிர்காலத்தில் கிழக்கிழங்கைத் தமிழ்ச் சமூகத்தையும் பண்பாட்டுத்தளத்தில் ஒன்றினைத்து அவர்களது சமூக, பொருளாதார, கல்வி, கலை, இலக்கிய, ஆன்மீக மேம்பாட்டை நோக்கி அவர்ளை அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தும் நோக்கங்களையும் கொண்டு செயற்பட்டுவருகின்றது.
இந்த பின்புலத்தில் ஐந்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா ‘கண்ணகி கலை இலக்கிய விழா 2015′ எதிர்வரும் 2015 யூன் 13ம், 14ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக இன்று நடைபெற்ற ஆரம்க்கூட்டத்தில் அதன் தலைவர் கோபாலகிருஸ்ணன் அறிவித்தார்.
கண்ணகி கலை இலக்கிய விழா ஆரம்பக் கூட்டத்தொரடருக்கு கண்ணகி கலை இலக்கியக் கூடல் உறுப்பினர்கள் மற்றும் பலர் வருகைதந்திருந்தனர்.
2015ம் ஆண்டுக்கான கண்ணகி கலை இலக்கிய விழாவானது, இம்முறை ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட வந்தாறுமூலையில் நடைபெற இருப்பதால் விழா நிகழ்வுகளுக்காக அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் கண்ணகி கலை இலக்கிய விழா ஏற்பாட்டுக்குழுவினர்.
(நன்றி: தாய்மண்)