மட்டக்களப்பு நகரில் ஜொலிக்கும் வெசாக் வெளிச்சக்கூடுகள் -பார்க்க அணி திரளும் சனக்கூட்டம்

புனித நோன்மதி தினமான இன்று பௌத்த மக்களின் வெசாக் வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.


இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இந்த நிகழ்வு சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவரும் அதேவேளை வடகிழக்கு பகுதியிலும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

வேசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுதை காணமுடிகி;ன்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இணைந்து மாபெரும் வெசாக் வெளிச்சக்கூண்டுகளை உருவாக்கியுள்ளனர்.

இதனை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு இன்று மாலை 7.00மணியளவில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சர் ஹக்மன பண்டார தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் உபுல் ஜயசிங்க உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது வெசாக் வெளிச்சக்கூண்டுகளை அதிதிகள் திறந்துவைத்ததுடன் அவற்றினை பார்வையிட்டனர்.

இந்த வெசாக்வெளிச்சக்கூடுகளை பார்ப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.