மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனையில் வைத்து கையடக்க தொலைபேசி திருட்டுக்கள் தொடர்பில் திங்கட்கிழமை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி செங்கலடியிலுள்ள கையடக்க தொலைபேசி கடையொன்றிலிருந்து 3 இலட்சத்து 9 ஆயிரத்து 850 ரூபாய் பெறுமதியான பல கையடக்க தொலைபேசிகள் பல திருட்டுப் போயிருந்தன.
இது தொடர்பாக தொடர்ந்தும் புலனாய்வு செய்து வந்த பொலிஸார் தன்னாமுனை வாசியான தச்சு வேலை செய்யும் தேவநாயகம் சுதர்ஷன் (வயது 35) என்பவரை திங்களன்று (04.05.2015) மாலை வேளையில் கைது செய்தனர்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகுதி கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினர்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே மேற்படி நபரை தாம் கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.