மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவினால் பெண்கள் விவகார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்ப்பினை எதிர்பார்த்து இருக்கும் பெண்களின் மனநிலையினை மாற்றி வருமானத்தினை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி இன்று மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலாளர் வி. தவராசா தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .
பெண்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்வதால் பல குடும்ப பிரச்சினைகள், பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படுகின்ற துஸ்பிரயோகங்கள் மற்று வெளிநாடுகளில் இவர்கள் முகம் கொடுகின்ற பல துன்புறுத்தல்களை ஒழிப்பதற்காக இவ்வகையான பெண்களுக்கு தங்களது வீட்டிலிருந்தவாறே சுய தொழில்களில் ஈடுபட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்கு இவ் வேலைத்திட்டம் தற்போது இலங்கை பெண்கள் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தபட்டுள்ளது.
இதன் கீழ் இந்த நிகழ்ச்சி திட்டம்தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை எதிபார்த்து இருகின்ற பெண்களில் தெரிவு செய்யப்பட பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வேலைத்திட்டம் நடாத்தப்பட்டது.
இடம்பெற்ற வேலைத்திட்ட பயற்சி நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் .உளவளத்துறை உத்தியோகத்தர்கள் ,வெளிநாட்டுவேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கண்டனர் .