மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஏ பிரிவு உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மட்டக்களப்பில் ஆரம்பமாகியது.
“மட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்” என்ற பெயரில் முதன்முறையாக இந்த சுற்றுப்போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலண்டனை தளமாகக்கொண்ட புலம்பெயர் மக்களின் அமைப்பான நம்பிக்கை ஒளியின் இலங்கையின் இணைப்பாக செயற்படும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை அமைப்பு மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து இந்த சுற்றுப்போட்டியினை நடாத்துகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபையின் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இந்த சுற்றுப்போட்டி இன்று பிற்பகல் 4.00மணியளவில் ஆரம்பமானது.
இந்த சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டி.தர்மரெட்னம்,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.தவராசா,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மட்டக்களப்பு மாநகர உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் கே.சிவகாந்தன் உட்பட உதைபந்தாட்ட கழகங்களின் தலைவர்கள்,உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள்,மாநகரசபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பட்டாளிபுரம் விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்பட்டு ஒரு வருடத்தினை கடந்துள்ள நிலையில் முதன்முறையாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
இதன்போது ஆரம்ப வைபவம் மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமானதுடன் ஆரம்ப நிகழ்வினை தொடர்ந்து முதல் போட்டியாக சீலாமுணை யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்துக்கும் நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக்கழகத்துக்கும் இடையிலான போட்டியாக நடைபெற்றது.
இந்த போட்டியில் சீலாமுணை யங் ஸ்டார் அணியினர் முதலாவது கோலினை போட்டு பட்டாளிபுரம் விளையாட்டு மைதான வரலாற்றில் முதல் கோலினை போட்ட கழகம் என்ற பெருமையினை பெற்றுக்கொண்டது.
இந்த போட்டியில் சீலாமுனை 2.0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 தொடக்கம் போட்டிகள் மைதானத்தில் நடைபெறவுள்ளன.