17வருடமாக இனவேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றியுள்ளேன் - டாக்டர் சதுர்முகம் கவலையுடன் தெரிவிப்பு

17வருடங்களாக இத்துறையில் உயர்பதவியில் பதவி வகித்துவரும் நான் என்றும் இன,மத வேறுபாடுகள் பார்க்காமல் அதற்கு அப்பாலே செயற்பட்டுவருகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.


இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக் அவர்கள் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை முஸ்லிம் வைத்தியசாலைகளை புறக்கணித்து தமிழ் வைத்தியசாலைகளுக்கு உதவுவதாக தெரிவித்தார்.

இது என்மீது அவர் அபாண்ட பழியை சுமத்தியுள்ளார்.நான் எனது இந்த பதவிக்காலத்தில் எந்தவித இனப்பாகுபாடும் அற்ற ரீதியிலேயே செயற்பட்டுவருகின்றேன்.

மாகாணசபை உறுப்பினரின் இவ்வாறான கருத்து என்னை மிகவும் பாதித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீரலி,

பிராந்திய சுகாதார பணிப்பாளரை எனக்கு மிகவும் நீண்ட நாட்களாக தெரியும்.அவரது அற்பணிப்பு மிக்க சேவையினை யாரும் குறைகூறமுடியாது.

கடந்த கால யுத்த சூழ்நிலையின்போதும் அவர் அர்ப்பணிப்புடன் சகல இனமக்களுக்கும் சேவையாற்றியவர்.அவரது சேவை என்றும் இனவேறுபாடுகளுக்கு அப்பால் இருந்தது என்றார்.