மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மதுபானசாலைகளை குறைப்பதற்கான வேண்டுகோளை அரசாங்கத்திடம் விடுப்பது எனவும் அவ்வாறு நடைபெறாதபட்சத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொள்வது எனவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் அபிவிருத்துக்குழு இணைத்தலைவர்களான சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீரலி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 67 மதுபானசாலைகள் செயற்படுவதாகவும் சில பகுதிகளில் அதிகளவாக மதுபானசாலைகள் உள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக மதுபானசாலைகள் உள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
எனினும் மதுபானசாலைகளுக்கான அனுமதியை இரத்துச்செய்யும் உரிமை மாவட்ட செயலகத்துக்கு இல்லையெனவும் அதற்கான பலம் மதுவரித்திணைக்கள ஆணையாளருக்கே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தவேளையில் மட்டக்களப்பு மாவட்;டத்தில் புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிவழங்கமுடியாது எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
எனினும் புதிதாக மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதிகள் வழங்கமுடியாதவகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் எதுவித மதுபானசாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லையெனவும் பழைய மதுபானசாலைகளே இயங்கிவருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீரலி, மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலைக்கும் இங்குள்ள மதுபானசாலைகளும் முக்கிய காரணமாகும்.எனவே இவற்றினை இங்கு குறைப்பது தொடர்பில் நாங்கள் அனைவரும் ஒருமித்த செயற்பாட்டினை மேற்கொள்ளவேண்டும்.
மதுபானசாலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அரைவாசியாக குறைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும்.அதற்காக இந்த கூட்டத்தில் ஏகமனதான தீர்மானிக்கப்படுகின்றது மட்டக்களப்பில் உள்ள மதுபானசாலைகளை அரைவாசியாக குறைக்கவேண்டும்.
அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் அனைவரும் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை வாகரையில் இருந்து களுவாஞ்சிகுடி வரையில் நடாத்துவோம்.இதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்றார்.