தந்தை அடித்துக்கொலைசெய்த மகன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை,மயான வீதியில் உள்ள ஞானமுத்து விஜயன்(60வயது)என்பவர் அவரின் மகனால் கடுமையான முறையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராரு காரணமாக தந்தை மகனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிச்சென்ற குறித்த படுகொலையை செய்த மகன் மதுஅருந்திய நிலையில் நேற்று இரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலைசெய்துள்ளார்.
இந்த சம்பவத்தின்போது விஜயன் இருதயநாதன்(24வயது)மகனே இவ்வாறு உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை தொடர்பான வாக்குவாதத்தினை தொடர்ந்து பொல்லினால் தந்தை கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த தந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய மகன் மதுபோதையில் திராய்மடு,குமார வீதியில் ரயிலில் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அண்மைக்காலமாக இலங்கையின் பல பாகங்களில் பெற்றோர் பிள்ளைகளினால் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.