மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் சனநடமாட்டம் அதிகமுள்ள பகுதியான கூழாவடி புகையிரத தண்டவாளத்துக்கு அருகில் இருந்தே இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் குறித்த பிரதேசத்தில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து 231படைப்பிரிவின் பொறியியல் இராணுவத்தின் குண்டுசெயலிழக்கச்செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குண்டு பாதுகாப்பான முறையில் திராய்மடு பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
இப்பகுதியில் இந்த மோட்டார் குண்டு கொண்டுவரப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.