தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வெருகல் படுகொலை நினைவு தினம் நேற்று வாகரையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு சித்திரைமாதம் 10ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளினால் கிழக்கு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 210பேர் உயிரிழந்தனர்.
இவற்றினை நினைவுகூரும் வகையில் வருடாந்தம் வெருகல்மலையில் யுத்தம் நடைபெற்ற பகுதியில் இந்த நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
நேற்று மாலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரான பூ.பிரசாந்தன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினராக ஜெயம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள்,உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உயிரிழந்தவரின் நினைவிடத்துக்கு மலரஞ்சலி செய்யப்பட்டு நினைவுத்தீபம் ஏற்றப்பட்டதுடன் வெருகல்படுகொலை நினைவுப்பேருரை சந்திரகாந்தனால் நிகழ்த்தப்பட்டது.