மாகாண விவசாய அமைச்சினால் மட்டக்களப்பில் பசுமாடுகள் வழங்கிவைப்பு

கிழக்குமாகாண விவசாய கால்டை அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை சித்தாண்டி ஆகிய பிரதேசங்ளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கன்னி பசுமாடுகள் வழங்கும் நிகழ்வு இன்று (11) வந்தாறுமூலை கால் நடை வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கால்நடை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண விவசாயகால்நடை அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கலந்துகொண்டார்.

இதன் போது கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்குமாகாண பணிப்பாளர் பார்சி மற்றும் கால் நடைவைத்தியர்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் பயனாளிகள் எனபலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கால் நடைவளர்ப்பாளர்களுக்கு பசுமாடுகள் பராமரிப்பது தொடர்பில் அமைச்சரினாலும் அதிகாரிகளினாலும் நெறிவுறுத்தப்பட்டதுடன ;பசுமாடுகள் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.