மட்டக்களப்பு நகரில் பழ விற்பனை நிலையங்களில் சோதனை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட பகுதிகளில் உள்ள பழம் விற்பனைசெய்யும் வர்த்தக நிலையங்கள் இன்று பிற்பகல் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.


மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் தேவநேசன் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டார்.

இதன்கீழ் மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள பழம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு வாரத்துக்கு இணைவாக இந்த சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தர்.

இதேபோன்று நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான பிரதேசங்களும் தீவிர சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுவருவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.